In Siddha medicine, infertility in male is called as ஆண் மலடு(Aan maladu), ஆண்மை குறைபாடு(Anmai Kuraipadu).
Causes of Male Infertility:
1. 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது . மன அழுத்தம் ஏற்படும்போது கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் உடல் உறவிற்கான ஹார்மோன் சுரப்பில் வித்தியாசம் ஏற்பட்டு விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், மன அழுத்தம் காரணமாக உடல் உறவில் கவனம் இல்லாமல் விந்து வெளியேற்றம் குறைய வாய்ப்பு உள்ளது .
2. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்பு குறைகிறது.
3. அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். எனவே உடல்சூடும் ஒருவகையில் காரணமாகிறது.
4. ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன்(Testosterone) சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
சித்தர் யூகிமுனி அவரது யூகிமுனி சிகிச்சா சாரம் என்னும் நூலில் விந்தனுவின் குறைபாடுகளை குறித்து விளக்கி உள்ளார்.
“பார்க்கவே ஆண்மகனின் விந்துதானும்
பதமான தித்திப்பு இல்லாததாலும்
ஏற்கவே சலமீதில் மிதப்பதாலும்
ஏலிலா ஊறு பற்றி இருப்பதாலும்
காகவே ஓர்திரத்தில் நுரை தான் போலும்
இயலான கருவதுவும் தரிக்க மாட்டா
தீர்கவே யூகிமுனி சிகிச்சா சாரம்
தெளிவாக பாடிவைத்தார் திறமாய் தானே !!”