சித்த மருத்துவத்தில் சிறப்புத் தன்னம் வாய்ந்தது தொக்கணம் ஆகும். எண்ணெய் அல்லது பொடி அல்லது கஷாயம் போன்ற மருந்துகளை தடவி அல்லது தடவாமல் தொக்கணம் செய்யப்படுகிறது. 30 முதல் 40 நிமிடங்கள் செய்யப்படும் தொக்கணத்தின் மூலம் பக்கவாதம், முகவாதம், பல்வேறு வாத நோய்கள், முதுகு தண்டுவட கோளறுகள், முதுமையில் ஏற்படும் பலகீனம், தலைவலி, உடல் வலி, ஆகியன நீங்குகின்றன. உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவம் தொக்கணம் செய்யலாம். சுரம் அசீரணம் இரத்தப்போக்கு, மாதவிலக்கு, தீவிர கழிச்சல் உள்ள நிலைகளில் தொக்கணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொக்கணம் செய்வதால் தோல் மினுமினுப்பு அடைவதுடன் உடலின் வெப்பம் குறைகிறது.வலிளி நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தொக்கணம் உதவுகிறது.
பார்வை அதிகரிக்கவும், மன அமைதியுடன் தூங்கவும், உடல் வலி நீங்கவும், கை, கால்களை பிடித்து இழுக்கும் ‘குரக்கு’ என்ற நரம்பு சார்ந்த வாத நோய் வராமல் தடுக்கவும் தொக்கணம் பெரிதும் உதவுகிறது. தொக்கணம் தொடர்ந்து செய்வதால் வயிற்று கோளாறு நீங்குவதுடன் செரிமான உறுப்புகள் சுறுசுறுப்பு அடைகிறது. நீண்ட நாள் வாழ்வதற்கு தொக்கணம் பெரிதும் உதவுகிறது. எண்ணெய் வடிவிலான மருந்துகளை உடலில் பூசி தொக்கணம் செய்வதால், எண்ணெய் சத்துள்ள நஞ்சுகள் நீங்குகின்றன. ஐம்புலன்களும் கூர்மையடைகின்றன. பொடி வடிவிலான மருந்துகளை உடலில் தூவி தொக்கணம் செய்வதால் தோலுக்கு கீழ் தங்கியுள்ள வியர்வை மற்றும் உப்புகள் வெளியேறி தேவையற்ற கொழுப்பு பொருட்கள் வியர்வை துவாரத்தின் மூலம் எண்ணெய் பசையாக வெளியேறுகின்றன. எளிய முறையில் கொழுப்பை கரைக்கும் முறை தொக்கணமாகும். குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட விசையில் தொக்கணம் செய்வதால் தசைகள் பலமடைகின்றன. தசைகளை மூடியிருக்கும் ‘ பேசிய ‘ என்று சொல்லக் கூடிய தசை சவ்வு மற்றும் தசை நார்கள் பலமடைய தோலின் வறட்சி நீங்க தொக்கணம் உதவுகிறது.